Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் CAA போராட்டம் நிறைவு …!!

சென்னையில் நடைபெற்ற CAAக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் முன்னெடுத்த போரட்டம் நிறைவு பெற்றது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆனால் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.தடையை மீறி இஸ்லாமிய அமைப்பினர் இன்று காலை 10.30 மணிக்கு போராட்டத்தை தொடங்கினர்.சென்னை  கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் வரை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேரணி  நடந்தது.

இதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இது எங்களுடைய தேசம் என்பதை வலியுறுத்தும் கையில் தேசிய கொடியை வைத்து முழங்கினர். பல்லாயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்களும் தங்களுடைய குழந்தைகளுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் 2.30 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டம் நிறைவு பெற்றதாக இஸ்லாமிய தலைவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |