பொன்னியின் செல்வன் படக்குழுவினரின் தஞ்சை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இத்திரைப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். இந்த பயணத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றார்கள். இந்த நிலையில் முதல் கட்டமாக சோழர்களின் தலைநகரான தஞ்சைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் திடீரென பயணம் ரத்து செய்யப்பட்டது. சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் ரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்த்துகாத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியிலே ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது