Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ஒருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெர்சிகோவில் முந்தைய 2 நிலநடுக்கங்களின் நினைவு நாளில் அந்நாட்டில் பயங்கர சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

வடஅமெரிக்க நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் வாடிக்கையானதாக  உள்ளது. இருப்பினும் சில சமயங்களில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி போட்டு வருகின்றது. அதில் கடந்த 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கமானது அந்த நாட்டை சின்ன பின்னமாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் 2017-ஆம் ஆண்டில் அதே செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி மெக்சிகோவின் பியூப்லா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால்  சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதிரி  நாட்டை உலுக்கிய 2 நிலநடுக்கங்களின் நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை அடுத்து தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நிலநடுக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில் மெக்சிகோ சிட்டி அருகில் உள்ள மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் நேற்று முன்தினம் மதியம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு கோல்கோமன் நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த  நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர  நிலநடுக்கமானது மைக்கோகன் மாகாணத்தை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் தலைநகர் மெக்சிகோ சிட்டியையும் கடுமையாக உலுக்கியது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. குறிப்பாக மைக்கோகன் மாகாணத்தில் ஆஸ்பத்திரிகள் உள்பட எண்ணற்ற பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்து சின்னபின்னமாகின. அதே போல் அண்டை மாகாணமான கோலிமாவின் மன்சானிலோ நகரில் வணிக வளாகம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் பீதியடைந்த நிலையில் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன் 2 முறை நாட்டை அதிரவைத்த அதே செப்டம்பர் 19-ஆம் தேதி மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு மெக்சிகோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |