Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 சர்வதேசப் போட்டியில் கோலிக்கு பின் இவர்தான்….. கே.எல்.ராகுல் நிகழ்த்திய புதிய சாதனை…. என்ன தெரியுமா?

இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களை எட்டியதோடு, மூன்றாவது வேகமான பேட்டர் ஆனார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி  மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 71* ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கே.எல் ராகுல் 35 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் (4 சிக்ஸர், 2 பவுண்டரி) 46 ரன்கள் எடுத்தனர்..

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்து வென்றது. கிரீன் அதிரடியாக 30 பந்துகளில் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்) 61 ரன்கள் எடுத்ததாலும், மேத்யூ வேட் 21 பந்துகளில் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) 45 ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது..
இந்த போட்டியில் கே.எல் ராகுல் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார். கடந்த சில தொடர்களாக பார்மில் இல்லாத கே.எல் ராகுல் இந்த போட்டியில் ஓப்பனிங் வீரராக இறங்கி 35 பந்துகளில் 55 ரன்கள்  குவித்ததன் மூலம் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்..  58வது இன்னிங்ஸில் ராகுல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.. இந்த சாதனை பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி தன்னுடைய 56வது சர்வதேச டி20 இன்னிங்சில் 2,000 ரன்களை கடந்தார். அதேபோல ரோஹித் சர்மா ஹர்மன் பிரீத் கவுர், மிதாலி ராஜ் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் சர்வதேச டி20 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர், 129 இன்னிங்ஸ்களில் அதிகபட்சமாக 118 ரன்களுடன் 3631 ரன்கள் எடுத்தார். அவர் தனது வாழ்க்கையில் 4 சதங்கள் மற்றும் 28 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிவேக பேட்ஸ்மேனான விராட் கோலி 97 இன்னிங்ஸ்களில் 3586 ரன்கள் குவித்து, அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  அவர் சமீபத்தில் ஆசிய கோப்பை 2022 இல் தனது முதல் டி20 சதத்தை அடித்தார் மற்றும் அதனுடன் 32 அரை சதங்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக 50 ரன்களுக்கு மேல் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் முதலிடத்தில் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் 52 வது இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்து விட்டனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தான் விராட் கோலியும், ராகுலும் உள்ளனர்..

Categories

Tech |