Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நல்ல ஸ்கோர் தான்…. “பாண்டியா நல்லா ஆடுனாரு”…. ஆனா இங்க தான் சொதப்பல்…. தோல்விக்கு பின் கேப்டன் ரோஹித் பேசியது என்ன?

நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று தோல்விக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்..

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி  மூன்று டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி  மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 71* ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கே.எல் ராகுல் 35 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் (4 சிக்ஸர், 2 பவுண்டரி) 46 ரன்கள் எடுத்தனர்..

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்து வென்றது. கிரீன் அதிரடியாக 30 பந்துகளில் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்) 61 ரன்கள் எடுத்ததாலும், மேத்யூ வேட் 21 பந்துகளில் (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) 45 ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது..

இந்நிலையில் போட்டிக்குப்பின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது, அணி சரியாக பந்துவீசவில்லை என்பதை ஒப்புக்கொள்வதற்கு வார்த்தைகள் எதுவும் இல்லை.“நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று நினைக்கிறேன். 200 என்பது பாதுகாக்க ஒரு நல்ல ஸ்கோர், மேலும் களத்தில் எங்களின் வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தவில்லை. இது எங்கள் பேட்டர்களின் சிறப்பான முயற்சி, ஆனால் பந்துவீச்சாளர்கள் அவ்வளவாக இல்லை. நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள் உள்ளன, ஆனால் என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த விளையாட்டாக இருந்தது. இது அதிக ரன்களை எடுக்கக்கூடிய மைதானம் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் 200 எடுத்தாலும் நீங்கள் கூலாக இருக்க முடியாது. நாங்கள் ஒரு அளவிற்கு விக்கெட்டுகளை எடுத்தோம், ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். “அவர்கள் சில அசாதாரணமான ஷாட்களை விளையாடினார்கள் என்றார்.

மேலும் அவர், எங்களால் கூடுதல் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. அதுதான் திருப்புமுனை, நாங்கள் இன்னொரு விக்கெட் எடுத்திருந்தால், விஷயங்கள் வேறுவிதமாக இருந்திருக்கும். நீங்கள் தினமும் 200 ரன்கள் எடுக்க முடியாது, நீங்கள் நன்றாக பேட் செய்ய வேண்டும். ஹர்திக் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து எங்களை அங்கு அழைத்துச் சென்றார். அடுத்த ஆட்டத்திற்கு முன் எங்களது பந்துவீச்சைப் பார்க்க வேண்டும்” என்றார்.

செப்டம்பர் 23, வெள்ளிக்கிழமை அன்று நாக்பூரில் நடைபெறவுள்ள 2வது டி20 போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

Categories

Tech |