Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடக்கப் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த திமுக பிரமுகர்… “தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ வைரல்”… பெரும் பரபரப்பு…!!!!!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளிக்கு அருகே பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் குப்பையை பள்ளி வளாகத்திற்குள் கொட்டியதாக கூறப்படுகின்றது. இதனை தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் தட்டி கேட்டிருக்கின்றார். இதனை அடுத்து அருகே வளர்ந்து இருந்த செடிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்றபோது பாஸ்கர் வீட்டில் இருந்தவர்கள் மாணவர்கள் மீது கழிவு நீரை ஊற்றியுள்ளனர். இதனை தட்டி கேட்ட மாணவர்களை அந்த குடும்பத்தினர் தாக்கியதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளியில் திரண்டுள்ளனர். அப்போது பாஸ்கர் குடும்பத்தினருக்கு ஆதரவாக அங்கு வந்து அவிநாசி பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரமணியின் கணவர் துறை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனின் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரி ரஞ்சித பிரியா நேற்று மாலை பள்ளி மாணவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் செய்தியாளர்களிடம் பேசும்போது பாஸ்கரனின் குடும்பத்தினர் மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் பெற்றோரை அழைத்து ஒரு முடிவெடுக்கலாம் என நினைத்திருந்தோம். ஆனால் அதற்குள் கவுன்சிலரின் கணவர் பள்ளிக்குள் புகுந்து என் மீது தாக்குதல் நடத்தி உள்ளார் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் துரை பேசும்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் அளித்ததால் இங்கு மாற்றலாகி வந்துள்ளார். மேலும் பாஸ்கரனின் மகன் மாற்றுத்திறனாளி அவர்தான் தெரியாமல் பள்ளி வளாகத்திற்குள் குப்பை கொட்டியதாக தெரிகின்றது. அந்த மாற்றுத்திறனாளிக்கு செந்தாமரை கண்ணன் மன உளைச்சல் ஏற்படுத்தி இருக்கிறார். இதனை தட்டிக் கேட்க சென்ற போது அவர் என்னை அடித்தார் அந்த வீடியோ வரவில்லை. மேலும் இது தொடர்பாக அவனாசி போலீசாரிடம் நான் புகார் அளித்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |