Categories
தேசிய செய்திகள்

5 வருடப் போக்குவரத்து…. சிக்னலில் மலர்ந்த காதல்…. திருமணத்தில் முடிந்தது….. மேம்பாலம் கட்டும் பணி இன்னும் முடியவில்லை….!!!!

5 வருடப் போக்குவரத்து நெருக்கடியால் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

போக்குவரத்து நெருக்கடியால் உருவான இந்த ருசிகர காதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரெடிட் என்ற ஐடி பணியாளர் இதை பகிர்ந்துள்ளார். பெங்களூரு சோனி வேர்ல்ட் சிக்னல் அருகே தனது காதலியை சந்தித்துள்ளார். முதலில் நண்பராக பழகிய அவர்கள் மேம்பால கட்டுமான பணியின் போது போக்குவரத்து நெருக்கடியால் நடந்தே பணிக்கு சென்றனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். இருவரும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மாற்று வழியில் பயணத்தை தொடர்ந்தனர்.

ஐந்து ஆண்டுகளாக கடந்த நிலையில் காதல் வளர்ந்து திருமணத்தில் முடிந்துள்ளது. நான் அவளுடன் மூன்று ஆண்டுகள் டேட்டிங் செய்தேன். திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் 2.5 கிலோமீட்டர் மேம்பாலம் இன்னும் கட்டுமானத்தில் உள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை 4000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். போக்குவரத்தில் தாங்கள் சொந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர் பலர், அதில் இந்த அழகான காதல் கதை பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Categories

Tech |