இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் படித்துவிட்டு வேலை இல்லாமல், படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். இதில் ஒரு சிலர் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார்கள். அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த அட்லாண்டா மார்டின் என்ற பெண் மளிகை பொருட்கள் மற்றும் உணவு டெலிவரி செய்து வாரத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் பணம் சம்பாதிக்கிறார். மேலும் இந்த பெண் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்தால் கூட அந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாது என்று கூறியுள்ளார். 22 வயது மட்டுமே உடைய அந்த பெண் விமான நிர்வாகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து முழு நேர பணியில் இருந்து விலகி விட்டு டெலிவரி ஊழியராக தன்னுடைய காதலரோடு இணைந்து பணியாற்றியுள்ளார். 11 மணி நேரம் வேலை இருந்தாலும் அதிகமாக சம்பளம் வாங்குவதாக இந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் காதலரோடு சேர்ந்து வேலை செய்யும் இவர் யார் எவ்வளவு டெலிவரி செய்கிறோம் என போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.