தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின் மோகன் ஜி இயக்கிய திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க, நட்டி நடராஜ் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக் குழுவினர் நேற்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தல அஜித் நடிக்கும் ஏகே 61 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என இணையதளத்தில் தகவல்கள் பரவி வருவதால், இயக்குனர் மோகன்ஜி தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரம் குறித்து சொல்லுங்க போனி கபூர் சார். அதற்கு ஏற்ப என்னுடைய படத்தின் சிவசிவாயம் பாடலின் வெளியீட்டு நேரத்தை நான் மாற்றிக் கொள்வேன். இன்று எனக்கு டபுள் டமாக்கா என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு, ஏகே 61 படத்தின் போஸ்டர் அறிவிப்பு குறித்த நேரத்தையும் இணையதளத்தில் கேட்டு வருகின்றனர்
#AK61FirstLook announcement time sollunga @BoneyKapoor sir.. Will change my #SivaSivayam first song release time accordingly.. Double damaka for me today..
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 21, 2022