தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சுசீந்திரன். இவர் தற்போது வள்ளிமயில் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, பிரியா அப்துல்லா, தம்பி ராமையா, பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் ஜிபி முத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் வள்ளி திருமணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. 1980-ம் காலகட்டத்தில் நடக்கும் கதையாக வள்ளிமயில் படம் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை பிரம்மாண்டமாக எடுப்பதற்கு படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த சண்டை காட்சிக்காக 50 ஸ்டண்ட் மாஸ்டர்கள் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த சண்டை காட்சிகள் சிறுமலை காட்டினுள் பிரம்மாண்டமாக கோவில் போன்று செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
–