தமிழகம் முழுவதும் சுமார் 3,500 தனியார் தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. தட்டச்சு பயிற்சி பெற்றால் அரசு வேலையில் வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. அதனால் பலர் தட்டச்சு பயிற்சி சேர்ந்து பயின்று வருகிறார்கள். தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் வருடம் தோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு என்று இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். வழக்கமாக இந்த தேர்வானது இரண்டு நிலைகளில் நடத்தப்படும்.
அந்த குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். இந்த முறையில்தான் பல வருடங்களாக தட்டச்சு தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் சமீபத்தில் அதில் மாற்றம் செய்யப்பட்டு இளநிலை மற்றும் முட்துநிலை தேர்வில் தாள்-1, லெட்டர் ஸ்டேட்மெண்ட் என்றும் தாள் இரண்டு ஸ்பீடு என்று மாற்றப்பட்டது. அதனால் அந்த முயற்சியை மாற்றி ஏற்கனவே நடத்தபட்டது போல தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழைய முறைப்படி தேர்வு நடைபெறும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகு தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடையை விதித்து மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.