மூதாட்டியை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நம்பிவயல் கிராமத்தில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகவள்ளி(70) என்ற மனைவி உள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் அது பகுதியில் வசிக்கும் தியாகராஜன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செண்பகவள்ளியின் மகன் பெருமாள் நிலத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தியாகராஜன், அவரது மனைவி ராஜம், தியாகராஜனின் சகோதரர் சேகர், உறவினரான திவாகர்(22) ஆகியோர் அங்கு சென்று பெருமாளுடன் தகராறு செய்துள்ளனர்.
மேலும் 4 பேரும் இணைந்து செண்பகவள்ளியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செண்பகவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தியாகராஜன், திவாகர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ராஜம், சேகர் அது இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.