தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஹரிகரன் நடிக்க கூட முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய்,இதய நோய் மற்றும் இரண்டு கிட்டி செயல் இழப்பு என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள இவர் இன்னும் ஆறு மாதம்தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கை விரித்து விட்டதாக அவரின் மனைவி கவிதா கூறியுள்ளார்.
தன்னை பராமரிக்க முடியாமல் மனைவி அவஸ்தை படுவதை பார்த்து கருணை கொலை செய்யக்கோரி ஹரிஹரன் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.