Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் பேசுவாருனு நினைச்சேன்…! ஆனால் எந்த பதிலும் சொல்ல… வேதனையோடு பேசிய எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, 16 மாத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்…  திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அல்லவா. ஒவ்வருவரா விலகுவது தான் திராவிட மாடல். ஏற்கனவே ஆர். ராஜா அவர்கள் பேசிய பேச்சுக்கு கூறிய பதில் கொடுத்தேன். அவர் கீழ்த்தரமான, இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக,  பேசியது மிகவும் கண்டிக்கக் கூடியது.

இது பற்றி நான் ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறேன். அவர் குறிப்பிட்ட அந்த வார்த்தை அவருடைய கட்சித் தலைவர் குடும்பத்திற்கு பொருந்துமா? திமுக தலைவருடைய மருமகன் அண்மையில் திருச்செந்தூர் சென்று யாகம் நடத்தினார்.

அவருக்கு ஆ.ராசா சொன்ன வார்த்தை பொருந்துமா என்று கேட்டேன் ? திமுகவின் கட்சி தலைவர் தான் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தேன். இதுவரைக்கும் பதில் கிடைக்கவில்லை. ஆ.ராசாவை கண்டித்து நீலகிரியில் நடத்திய பந்து வெற்றி என சொல்வது பற்றி தெரிந்து கொண்டு சொல்கிறேன். இருந்தாலும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், பந்து வெற்றியாக முடிந்தது என்று சொல்லி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |