இந்தியாவின் பொதுத்துறை வங்கியாளர் எஸ்பிஐ வங்கி புதிய கேஷ்பேக் கிரெடிட் கார்டு ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.இதனை வைத்திருக்கும் நபர்கள் ஆன்லைனில் மேற்கொள்ளும் அனைத்து செலவுகளுக்கும் ஐந்து சதவீதம் கேஷ் பேக் வழங்கப்படும். தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் கேஸ் பேக் சலுகைகளை எஸ் பி ஐ வங்கி அறிவித்துள்ளது.
பொதுவாக கிரெடிட் கார்டுகளில் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு கேஸ் பாக்ஸ் சலுகை கிடைக்கும். ஆனால் தற்போது எஸ்பிஐ நிறுவனத்தின் இந்த புதிய கிரடிட் கார்டு கேஸ் பேக் சலுகைகளை மட்டுமே மையமாகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SBI Card Sprint ஆன்லைன் தலை மூலமாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் எளிதில் வீட்டுக்கே நேரடியாக எஸ்பிஐ வங்கி கேஷ்பேக் கிரெடிட் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த கிரெடிட் கார்டு வாங்குவோருக்கு முதல் ஆண்டு இலவச இணை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. மாதத்திற்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை கேஷ் பேக் சலுகை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த கிரெடிட் கார்டு பல்வேறு சலுகைகளை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.