Categories
சினிமா தமிழ் சினிமா

“கலைஞரே பயந்தாரு, எப்படி மணிரத்னம் செய்றாரு…?” தஞ்சை பயணத்தை கைவிட்ட படக்குழு….!!!!!

தஞ்சை பயணத்தை பொன்னியின் செல்வன் படக்குழு கைவிட்டது குறித்து பேசப்பட்டு வருகின்றது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தஞ்சை கோவிலுக்கு செல்ல படக்குழு திட்டமிட்டார்கள். இதனால் ரசிகர்கள் மணிரத்தினத்திற்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை? பொன்னியின் செல்வன் படம் காலி எனக் கூறினார்கள்.

மேலும் தஞ்சை கோவிலின் பிரதான வாயில் வழியாக சென்றால் பொன்னியின் செல்வன் நிச்சயம் தோல்வியடைந்து விடும். இல்லை என்றால் அங்கு செய்பவர்களுக்கு ஏதாவது நடக்கும். தஞ்சை கோவிலின் ராசி பற்றி தெரிந்தும் மணிரத்னம் ஏன் ரிஸ்க் எடுக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை பிரதான வாயில் வழியாக செல்லாமல் பின் வழியாகத்தான் செல்வார். அப்படி இருந்தும் கோவிலுக்கு சென்ற பிறகு அவர் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. இது மணிரத்னத்திற்கு தேவையில்லாத வேலை என கூறியதை தொடர்ந்து தஞ்சை கோவிலுக்கு செல்லும் திட்டத்தை பொன்னியின் செல்வன் படக்குழு கைவிட்டது. தற்பொழுது படக்குழுவினர் திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |