புனேவில் ரூபி கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மோசமான நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணம் போட்டவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு கடன் கூட வழங்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக வங்கியில் பணம் போட்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதனையடுத்து வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 5 லட்சம் மட்டுமே வழங்கப்படும். இதற்கு மேல் அதிகமாக டெபாசிட் செய்திருந்தால் கூட அவர்களுக்கும் 5 லட்சம் மட்டும் தான் வழங்கப்படும். அதன் பிறகு வங்கியின் வணிக சேவைகள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டதால், வாடிக்கையாளர்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவோ எடுக்கவோ முடியாது. மேலும் சில கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் பிடியில் சிக்கியுள்ளதால், சிறு கூட்டுறவு வங்கிகளின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.