ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் சென்ற 22 வயது பெண்ணை காவலர்கள் அடித்துக் கொன்றதையடுத்து, ஹிஜாபை எதிர்த்து பெண்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தற்போது வரை பெண் உட்பட மூன்று நபர்கள் பலியாகியுள்ளனர். ஐந்தாம் நாளாக தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், பெண்கள் பலர் தங்களின் ஹிஜாபை கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
மேலும், அதனை நெருப்பு வைத்து எரித்துள்ளனர். ஈரான் நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாபின்றி தன் சகோதரருடன் சென்ற 22 வயது பெண்ணை கலாச்சார காவலர்கள் கைது செய்தனர். காவலில் இருந்து அவரை கொடூரமாக அடித்ததில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பெண்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.