Categories
தேசிய செய்திகள்

8 வயது சிறுவனை….. பீர் குடிக்க வைத்து இப்படியா செய்வது?…. இளைஞர் செய்த கொடூர சம்பவம்….!!!!

கேரளாவில் அண்ணன் மகனான எட்டு வயது சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் நெய்யாட்டிங்கரை பகுதியில் வசித்து வருபவர் மனு. இவரது அண்ணன் மகனான 8 வயது சிறுவனை அழைத்து கொண்டு ஓணம் பண்டிகை கொண்டாட அவர் வெளியே சென்றுள்ளார். பின்னர் மது கடை ஒன்றிற்கு சென்று பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் சிறுவனிடம் பீரை கொடுத்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சிறுவனும் வேறு வழியின்றி அதனை வாங்கி குடித்து உள்ளான். இதனை மனு வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இதன்பின்பு அந்த வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து உள்ளார். இதனை சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.

உடனடியாக அவர்கள் நெய்யாட்டிங்கரை போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மனுவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த அண்ணன் மகனான சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்தி அதனை வீடியோவாக எடுத்து பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |