போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.அகரம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி பாஸ்கருக்கு பிறந்தநாள் ஆகும். அன்று காலை வேலைக்கு சென்ற பாஸ்கர் மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாஸ்கரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் பணிச்சுமை காரணமாக பாஸ்கர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.