நீட் தேர்வில் SC/ST மாணவர்களுக்கு கோட்டா இருப்பதால் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியது குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன்,
பாரதிய ஜனதா கட்சியில் ஒரு அமைச்சராக இருக்கின்ற நிலையில் அதற்காகு ஆதரவாக தான் அவர்கள் பேசியாக வேண்டும், ஆகவே அவருடைய கருத்தை நாம் தலித் தலைவரின் கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியாது, பிஜேபி மந்திரியின் கருத்து என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீட் எந்த அளவிற்கு மாணவர்களை பாதிக்கும் என்பதை தமிழகத்தில் இருந்து பார்க்க வேண்டும், பெரியார், அம்பேத்கர் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும். இல்லை என்றால் நீட் எதிர்ப்பு என்பது ஏற்படாது, அதற்கு வாய்ப்பு இல்லை, வட இந்திய மாநிலங்கள் இப்படித்தான் அதை அணுகுவதாக நான் பார்க்கிறேன்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நீட் விலக்கு சட்ட மசோதா ஒரு முறைக்கு இருமுறை நிறைவேற்றப்பட்டு ,ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது, முதல் மசோதாவை தள்ளுபடி செய்து விட்டார்கள், இரண்டாவது மசோதா கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசின் அதிகாரத்தை எந்த அளவிற்கு உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று. உடனடியாக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் விடுகிறேன் என தெரிவித்தார் .