கடந்த 40 வருடங்களில் தற்போது வாழ்க்கை தரம் என்பது பல்வேறு முறைகளில் மேம்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் பொருள்களால் நம் வாழ்க்கை எளிமையாக சௌகரியமாக உள்ளது. தற்போதெல்லாம் மிக்சி, கிரைண்டர் என்று அனைத்திற்கும் மிஷின். முன் எல்லாம் அம்மிக்கல், ஆட்டங்கள் என்று மணிக்கணக்கில் நேரம் ஆகும். இதனால் பெண்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து டிவி, கம்ப்யூட்டர், மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் என்று அனைத்தும் டெக்னாலஜி முறையில் முன்னேறி விட்டது.
Great design pic.twitter.com/xpazcjLlXj
— Tansu Yegen (@TansuYegen) September 13, 2022
தற்போது அடுத்த கட்டமாக வீட்டில் அதிக இடத்தை அடைத்து நிற்பதிலும், அதிக செலவு கொண்டதாக இருப்பதிலும் மாடிப்படிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இடப்பற்றாக்குறை உள்ள நிலையில் மாடிப்படி அமைப்பதே பெரும் சிரமமாக இருக்கும். ஆனால், இதற்காக ஒவ்வொரு முறையும் ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்க முடியுமா என்ன? அதற்கு தீர்வு தரும் வகையில் தான் இப்போது ஃபோல்டிங் என்று சொல்லக் கூடிய மடக்கி வைத்துக் கொள்ளும் வகையில் மாடிப்படி அறிமுகமாகியுள்ளது. இரும்புக் கம்பி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலில் படிகளை செய்து, அதனை சுவற்றோடு மடக்கி வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் சமயத்தில் மட்டும் அவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.