Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான 11ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள்…. !!!!

11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்  வகுப்புக்கான மதுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு கூட்டல் மறு மதிப்பீட்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளையும் எழுதினர். இந்த நிலையில் இன்று துணை தேர்வுகளில் மறு கூட்டல் மறு மதிப்பீட்டு காண முடிவுகள் இன்று  காலை 11 மணிக்கு வெளியானது.

இதனை மாணவர்கள் WWW.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்தனர். மேலும்  மாணவர்களுக்கு திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இதை இணையதளத்தில் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மாணவர்களும் இணையதளத்தின் வாயிலாக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |