Categories
மாநில செய்திகள்

“நாங்க ஜாதி பார்க்க மாட்டோம்”…. அது வெளியில மட்டும்தான்…. உள்ளுக்குள்ள அப்படி இல்ல…. சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்….!!!!

தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி,  எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். முன்னதாக சசிகலா, டிடிவி தினகரனை நிக்கியது போல ஓபிஎஸ் மீதும் நடவடிக்கை எடுத்ததால் அதிமுகவில் ஜாதி ஆதிக்கம் தலை தூக்கி விட்டது என்றெல்லாம் ஈபிஎஸ்க்கு எதிராக பலர் பேசத் தொடங்கினர்.

ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் வைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது செங்கோட்டையன் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது,  அதிமுக சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன்,  நானும் – எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே ஜாதி என்றும்,

எங்கள் ஜாதி உள்ளவரே தமிழ்நாட்டில் முதலமைச்சராக வரவே முடியும் என்று கூறியதாக கடும் அதிர்ச்சியை தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவர் இப்படி பேசலாமா என விமர்சித்த அவர், எம்ஜிஆர் கால அதிமுக குறித்து நினைவு கூர்ந்தார். அதில் 1977 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் இருந்து ஈரோடு பிரியாமல் இருப்பதற்கு முன்பு  ”பெரியார் மாவட்டம்” சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது கவுண்டர்களை தவிர யாருக்கும் இங்கு சீட்டு கொடுத்தாலும் அதிமுக ஜெயிக்காது என எம்ஜிஆரிடம் சொன்னபோது,

எனக்காக,  கட்சிக்காக இந்த முகத்திற்கு தான் ஓட்டு போடுவார்கள். ஜாதிக்காக யாரும் ஓட்டு போடுவதில்லை. அதனால் இங்கே ஜாதிக்கு வேலை இல்லை. எல்லோரும் எழுந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டு,  நான் யாரை வேட்பாளராக போடுகிறானோ, அவர்களுக்கு போய் வேலை பாருங்கள் என்று சொல்லிவிட்டதாக கூறினார். மேலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கவுண்டர்களை தவிர யாரும் வெற்றி பெற முடியாது என்று சொல்லிய நிலையில் பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினார்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் ஒக்கிலியர் சமுதாயம் அதிகம் என்று சொன்னபோது சிறுமுகை செட்டியார் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினார். கொங்கு மண்டலம் திருப்பூரில் மலையாள சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்தினார். கோவை மேட்டுத் தொகுதியில் கவுண்டரை நிறுத்தாமல் நாடார் சமுதாயத்தை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். இப்படிப்பட்ட ஒரு கட்சியில் செங்கோட்டையன் ஜாதி சார்ந்து பேசியது வேதனை அளிப்பதாக அவரது தெரிவித்தார்.

தேர்தல் வரும்போது பிரச்சாரம் செய்யும் போதெல்லாம் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் நாங்கள் ஜாதி மதம் பார்ப்பது கிடையாது. எங்களுக்குள் ஜாதி மத பேதம் கிடையாது. அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் கட்சிக்குள் வைத்து பார்க்கும் போது நேர் எதிராக ஒருவரை ஒருவர் ஜாதியை வைத்து சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |