தயிர், தேன் கலவையால் உடனடி அழகு உங்கள் முகத்தை தேடி வரும்.
உங்கள் சருமத்தில் தயிர் மற்றும் தேனில் செய்யும் இந்த கலவை உங்களின் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்… எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக், தேன்க்கு உண்டு. தயிர் சருமத்தை மிக விரைவில் சுத்தப்படுத்தும்.
ஒரு டீஸ்பூன் தேன், 2 ஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் தடவுங்கள், காய்ந்ததும் கழுவுங்கள், தொடர்ந்து இதை செய்யும் பொழுது உங்கள் வறண்ட சருமம் நன்றாக மாறி, சருமத்தை பளிச்சென்று ஆக்கும்.
வறண்ட சருமம்:
தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறண்ட சருமமாக இருந்தால் ஈரப்பதத்தை அழித்து, எண்ணெய் ஆக்குகிறது. தயிரில் உள்ள அமினோ அமிலம் மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
இதனால் முக அழகு கூடும். சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை இவை நீக்கும். அலர்ஜியை தடுக்கும். தேன் தயிர் சிறந்த பேஸ்டாக முகத்தில் போடுவதற்கு செயல்படுகிறது.
முகப்பரு:
தேனும், தயிரும் சிறந்த கிருமி நாசினியும் கூட, இவைகள் முகப்பருவை அண்டவிடாமல் தடுத்து முகம் பொலிவாக இருக்க உதவி புரிகிறது.
கண் கீழ் உள்ள பகுதி:
கண்களும் அதற்கு கீழ் உள்ள பகுதிகளும் மிகவும் சென்சிட்டிவான பகுதி. அதில் எளிதில் சுருக்கங்கள் வந்துவிடும். சுருக்கங்களையும் இந்த கலவை நாளடைவில் குறைத்து, உங்களை அழகாக காட்டும். இவை நம் சருமத்திற்கு இறுக்கத்தை தருகிறது. இதனால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக உங்கள் முகத்தை காட்டும்.
தோல் அலர்ஜி:
சம்மரில் நிறைய பேருக்கு வருவது அலர்ஜி. சிவந்த தோல் , தடித்த தோல், முகம், கழுத்து, கை என வெயில் படும் இடங்களில் எல்லாம் அலர்ஜி ஏற்படும். இந்த கலவையை தொடர்ந்து உபயோகித்தால் சரும பிரச்சனைகளில் இருந்து விடுதலை காணலாம்.