Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோத்தகிரி நேரு பூங்கா…. “பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்”….!!!!!!

கோத்தகிரி நேரு பூங்காவை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரில் உள்ள நேரு பூங்கா பிரபல சுற்றுலா தளமாக உள்ளது. இந்த நிலையில் சென்ற சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் பூங்காவில் இருக்கும் புல் தரைகளில் அதிக அளவு புற்கள் வளர்ந்தது. மேலும் மலர் செடிகளில் பூத்திருந்த மலர்களும் அழுக ஆரம்பித்தன.

இந்த நிலையில் சென்ற சில நாட்களாக மழை பெய்யாமல் இருப்பதால் பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். புல் தரைகளில் அதிகமாக வளர்ந்திருக்கும் புற்களை இயந்திரம் மூலம் வெட்டி சமப்படுத்தும் பணியிலும் அழுகிய மலர் செடிகளை அகற்றி புதிய நாற்றுகளை நடவும் களைச்செடிகளை அகற்றும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

Categories

Tech |