50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க பிரபல நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில். அடுத்த மாதம் 29ஆம் தேதி வரை 50 சதவீத விமானங்கள் மட்டுமே இயக்க அனுமதி அளித்துள்ளது. ஏனென்றால் இந்த நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் 19 -ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை 8 முறை விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் பாதி வழியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் மாதம் 19-ஆம் தேதி புறப்பட்ட விமானம் காற்றழுத்த பிரச்சனை காரணமாக மீண்டும் தில்லிக்கு திரும்பியது. இதனையடுத்து ஒரே நாளில் பயணிகளுடன் பூனைவிலிருந்து தில்லி நோக்கி புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 2022-ஆம் ஆண்டு கோடை கால போக்குவரத்துக்கு 50 சதவீத விமானங்களை மட்டுமே எட்டு வார காலத்துக்கு இயக்கிக் கொள்ள டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது.