கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும்.
அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும்.
சம்பள உயர்வு, பணி உயர்வு ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் சொல்கேட்டு நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன் நிறம்.