திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இன்றைக்கு இந்த இயக்கம் நடந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றது என்றால், இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற ஜே.கருணாநிதியாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் ஆக இருந்தாலும் சரி.. நான் ஜே.கருணாநிதியை பார்க்கிற போது, அவருடைய தந்தை பழக்கடை ஜெயராமனை தான் நினைத்துப் பார்க்கிறேன்.
காரணம் அவர்கள் எல்லாம் பெற்ற, உழைத்த, உழைப்பால் தான் இவர்களெல்லாம் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஜெயராமன் ஒரு கவுன்சிலராக கூட வரல. காரணம் இதையெல்லாம் இன்றைக்கு பொறுப்பில் இருக்கிறவர்கள் அது வேலுவாக இருந்தாலும் சரி, தம்பி குட்டியாக இருந்தாலும் சரி இன்றைக்கு திமுக குடும்ப அரசியல் என்று சொல்கிறார்களே, குடும்ப அரசியல் தான்.
குடும்பம் குடும்பமாக தொடர்ந்து ஒரே கட்சியில் இருக்கின்ற ஒரு குடும்பம் உண்டு என்றால் இது திராவிட முன்னேற்றக் கழக குடும்பம் தான். அந்த குடும்ப பாசம் இருக்கின்ற காரணத்தினால் தான் அண்ணா மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தினுடைய தலைமையை தானயத் தலைவர் கலைஞர் ஏற்றுக் கொண்டதற்கு பின்னால் 50 ஆண்டுகாலம் அவருடைய தலைமையிலே இந்த இயக்கம் சிறப்பாக நடை போட்டது என தெரிவித்தார்.