செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை நானும் மரியாதைக்குரிய சகோதரர் வேலுமணி அவர்களும், முன்னாள் அமைச்சர் சி. சண்முகம் அவர்களும் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது அவர்களிடத்தில் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தோம். அம்மாவோட அரசு இருக்கின்ற பொழுது, நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடத்தில் கோதாவரி – காவேரி நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அந்த கோரிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதோடு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு இருக்கின்ற பொழுது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை சந்திக்கின்ற பொழுதெல்லாம் காவேரி நதிநீர் மாசுபடுவதை தடுத்து நிறுத்துகின்ற பலவிதமாக நடந்தாய்வாழி காவிரி என்ற திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,
இருஅவை கூட்டு கூட்டத்திலே குடியரசு தலைவர் உரையிலேயே நடந்தாய்வாழி காவிரி திடடம் நிறைவேற்றப்படும் என்ற வாசகத்தை இடம் பெற செய்தார்கள். அதையும் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டோம். தமிழகத்தில் போதை பொருள் அனைத்து பகுதிகளிலும் தடை இல்லாமல் கிடைக்கின்றது. அதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த கஞ்சா போன்ற போதை பொருள் இருப்பதால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு அதனை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசை வலியுறுத்தினோம். 16 மாத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்… திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் அல்லவா.
ஒவ்வருவரா விலகுவது தான் திராவிட மாடல். நாகர்கோவிலில் சாலை சரியில்ல என கேட்ட நாம் தமிழர் கட்சியினரை திமுகவினர் அடித்துவிரட்டையது பற்றி நான் பார்க்கவில்லை, முழுசா தெரிஞ்ச பிறகு தான் அதற்கு கருத்து சொல்ல முடியும். இப்போ தான் டெல்லியில் இருந்து விமான மூலம் இறங்கி உங்களை நேரில் சந்திக்கிறேன் என தெரிவித்தார்.