Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா ராய் குறித்து பேசிய திரிஷா”…. ஷூட்டிங்கிற்கு…. என்ன சொன்னார் தெரியுமா…????

ஐஸ்வர்யா ராய் குறித்து த்ரிஷா கருத்து தெரிவித்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த நிலையில் திரிஷா ஐஸ்வர்யா ராய் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஐஸ்வர்யா ராய் மிகவும் ப்ரொஃபஷனலானவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார். அதிகாலை காட்சி என்றால் இரவு இரண்டு மணிக்கு எழுந்து தயாராகி முதல் நாளாக வந்து விடுவார். நந்தினி வேடத்தில் வேறு யாரும் இந்த அளவிற்கு நடிக்க முடியாது என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் கதைப்படி நந்தினிக்கும் குந்தவைக்கும் இடையே ஆகாது. இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் சேர்த்து பேசினால் மணிரத்தினம் உடனே திட்டுவாராம். கதாபாத்திரமாகவே இருக்கணும். நீங்க ரெண்டு பேரும் சிரிச்சு பேசவே கூடாது என உத்தரவிட்டாராம் என பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |