95வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து குஜராத்தி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது.
2023 ஆம் வருடம் 95வது ஆஸ்கர் விருது விழா நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து ஊடக சந்திப்பு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
அப்பொழுது கூறப்பட்டதாவது, இந்தியில் இருந்து பதாய் ஹோ, ராக்கெட்ரி, ஜூண்ட், பிரம்மாஸ்திரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனெக் உள்ளிட்ட ஆறு திரைப்படங்கள், அசாம் மொழியில் செம்கோர், தமிழில் இரவின் நிழல், குஜராத்தில் செலோ ஷோ, தெலுங்கில் ஆர் ஆர் ஆர், ஸ்தலம், மலையாளத்தில் அரியுப்பு, பெங்காலியில் அபராஜிதோ உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் போட்டியில் பங்கேற்றது. இதில் இந்த வருடத்திற்கான ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பாக ஒரு மனதாக ஆஸ்கார் விழாவிற்கு செலோ ஷோ என்ற குஜராத்தி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.