தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக் கல்வியில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு பிறகு ஆய்வக உதவியாளர் பதவியில் இருந்து இளநிலை உதவியாளராக பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற பணியாளர்களின் விவரம் தேவைப்படுகின்றது.
இது தவிர பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்கள்,இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் பணியாளர் விவரங்களையும் தனி அறிக்கையாக இயக்குனராகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த பணியின் போது உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி யாருடைய விவரமும் விடுபடாதவாறு அறிக்கையை விரைவாக தயாரித்து அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.