Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள்…. ஊருக்கு போக ரெடியா இருங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இந்த வருடம் ஆயுத பூஜை வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வருகின்ற 30ஆம் தேதி,அக்டோபர் 1 ஆகிய இரண்டு நாட்களும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினசரி 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 2050 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். அதனைப் போலவே பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |