Categories
அரசியல்

நவராத்திரி நாட்களில் எதை செய்ய வேண்டும்?… எதையெல்லாம் செய்யக்கூடாது?…. இதோ முழு விவரம்….!!!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழா 10 நாட்கள் அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொலு வைத்து சிறப்பிக்கப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் எதையெல்லாம் செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

நவராத்திரிக்கு கொலு வைப்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வழங்க வேண்டும். எந்த நாள் எந்த உணவு செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலும் உள்ளது. அதற்கு ஏற்றது போல தவறாமல் விளக்கேற்றி கற்பூரம் காண்பிக்க வேண்டும். அம்பாலின் திருவுருவப் படங்களை பூஜை செய்து தினமும் நெய்வேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. இது முழுக்க முழுக்க பெண்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை.

இந்த நாட்களில் பெண்களுக்கு அவமரியாதை செய்யும்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மரியாதை அளிப்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.எவ்வளவுதான் பூஜை செய்து ஒன்பது நாட்களுக்கான பூஜை விதிமுறைகளை சாசனத்தை முறையாக பின்பற்றி வந்தாலும் வீடு கட்டாயம் அமைதியாக இருக்க வேண்டும். வீட்டில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் நடக்கக்கூடாது.

தினமும் சிறுமிகள் அல்லது பெண்களை வீட்டிற்கு வரவழைத்து உங்களால் இயன்ற தாம்பூலம் வைத்து அவர்களுக்கு ஏதாவது கொடுத்த ஆசி பெறலாம்.ஒன்பது நாட்களில் வெள்ளிக்கிழமை அன்று பெண்களை அழைத்து விருந்து வைத்து புடவை அல்லது துணி ஏதாவது வாங்கித் தரலாம்.நெய்வேதியம் செய்யும் உணவுகளில் பூண்டு வெங்காயம் மற்றும் எவ்விதமான மசாலா பொருட்களையும் சேர்க்காமல் செய்வது மிகவும் நல்லது.

வீட்டில் நவராத்திரியை முழுமையாக ஆச்சார அனுஷ்டானத்துடன் கடைபிடிக்கும் போது வீட்டில் உள்ள ஆண்கள் ஒன்பது நாட்களும் சேவிங் செய்யாமல் முடி வெட்டிக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது மாலை பூஜை செய்பவர்கள் மதிய நேரத்தில் தூங்கக்கூடாது. வீட்டில் உள்ள அனைவருமே நவராத்திரி முடியும் வரை மாமிசம் சாப்பிடக்கூடாது.எனவே இந்த விதிமுறைகளை எல்லாம் நவராத்திரி நாட்களில் கடைபிடிக்க வேண்டும்.

Categories

Tech |