தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் அண்டார்டிகாவில் ஓனம் கொண்டாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதில் உறைந்த ஏரியில் உள்ள பணியின் மீது இளைஞர்கள் குழு அழகிய மலர் வடிவத்தை செதுக்கியிருக்கின்றனர். அதில் ஓணம் அண்டார்டிகா என எழுதப்பட்டுள்ளது. அதன் அருகே அமர்ந்து இளைஞர்கள் புகைப்படம் எடுத்திருக்கின்றார்கள். இதனை அடுத்து இந்தியர்கள் ஓணம் கொண்டாடுவதை உங்களால் தடுக்க முடியாது அண்டார்டிகாவில் கூட ஓனம் சிறப்பாக கொண்டாடுவார்கள் என ஆனந்த் மகேந்திரா தலைப்பிட்டு இருக்கின்றார். இந்த நிலையில் இந்த வீடியோவை 67,000 ற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
Categories