பாலிவுட் திரையுலகில் மிகமுக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியாகிய இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகினார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான வசூல்குவித்த கைதி மற்றும் விக்ரம் படங்களை ஒரே சமயத்தில் பார்த்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் திரைப்படத்தை பாருங்கள் என கூறினார். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு முதலில் கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு பிறகு, விக்ரம் திரைப்படத்தை பார்த்துள்ளார். இந்த 2 திரைப்படங்களையும் பார்த்தபின் லோகேஷை பாராட்டிய அனுராக் காஷ்யப், அவரது யூனிவர்ஸில் தானும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.