நாடே கொண்டாடும் நவராத்திரி பண்டிகை வந்துவிட்டது. அம்பிகையின் அருள் வேண்டுமென்றால் உங்க வீட்டில் கொலு வைக்கலாம். அப்படி உங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கான டிப்ஸ் இதோ. 1. கொலு வைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். ஆடம்பரமாகவோ நம்முடைய வசதியை பிறர் அறியும் நோக்கமாகவும் இதை செய்யக்கூடாது. இருக்கும் இடத்தில் இயன்றதை செய்தாலும் நிச்சயம் அம்பிகையே அருள் புரிவாள். பொல்டிங் டைப் படிகள் வைத்திருந்தால் ஊர் விட்டு ஊர் மாறி சென்றாலும் அதை எடுத்துச் செல்வது எளிதாக இருக்கும்.
கொலுவில் பூங்கா வைக்க வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சட்டியில் மண் வைத்து கம்பு, வெந்தயம், தனியா விதைகளை தூவி வைத்துக் கொள்ளலாம். அப்படி மறந்து போய்விட்டால் மரத்தூள் எடுத்துக் கொண்டு பச்சை இங்க் உத்தி கொஞ்சம் காய வைத்தால் புல் வெளி, மலை, காடு எல்லாம் எளிதில் வைத்துக் கொள்ளலாம். கோட்டை மதில் செய்வதற்கு பேப்பர் கப் வண்ணம் அடித்து அல்லது டிசைன் வரைந்தோ செய்து விடலாம். வாய்ப்பகுதியில் படை தடவி வரிசையாக நிறுத்தினால் சூப்பரான மதில் ரெடியாகிவிடும். தீக்குச்சியில் பேப்பரால் கொடி செய்து ஒட்டி கொடி கம்பம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
கருப்பு வண்ணம் அல்லது கரிபொடி தார் சாலைகள் செய்ய உதவும். ஆனால் சிலருக்கு கருப்பு வண்ணம் கொலுவில் வைக்க சங்கடப்படும் என்பதனால் கருநீலத்தை உபயோகிக்கலாம். கொலு பொம்மைகள் பார்ப்பதற்கு டல்லாக இருந்தால் அம்மன் பாவாடைகள், டிரஸ் களை வாங்கி பொம்மைகளுக்கு கட்டலாம். கல் வைத்த ஸ்டிக்கர் பொட்டுட அல்லது கல் பொட்டு வாங்கி பொம்மைகளின் மேல் ஒட்டி டிசைனர் டிரஸ் போட்டு வைக்கலாம். பழைய சீடியில் குச்சி அல்லது பிளாஸ்டிக் ஸ்டிக் ஒட்டி பெரிய பொம்மைகளுக்குள் பின்னால் ஒளிவட்டம் சுற்றுவது போல வைக்கலாம்.
தரை விரிப்பை பின் செய்து வைக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் துணி பிடித்து இழுத்தாலும் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குட்டி சிரட்டையில் தேங்காய் நாரை பில் செய்து வைத்தால் போதும் கூடு ரெடி ஆகிவிடும். இவ்வாறு சின்ன சின்ன டிப்ஸ்களை தெரிந்து கொண்டு கொலு வைத்து அம்பிகையின் அருள் பெற பெறுங்கள்.