தமிழகத்தில் கொரோனாவுடன் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 100 முகங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் பூந்தமல்லி கொலப்பன்சேரியில் அமைக்கப்பட்டிருந்த காய்ச்சல் முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தொடங்கி வைத்தார்ம் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவ காலத்தில் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே முதல்வர் அறிவித்தலின்படி சென்னையில் 100 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவது 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சசிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் வரும்போது ஒன்றரை சதவீதம் காய்ச்சல் உயர்வது வழக்கம்.
அதனை போல தான் தற்போதும் காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போது ஹெச் 1 என் 1 காய்ச்சலால் 353 பேர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. அதில் 285 பேர் தனியார் மருத்துவமனையிலும், 9 பேர் அரசு மருத்துவமனையிலும், 59 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் துறை, ஊரக உள்ளாட்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய மூன்று துறைகளை சேர்ந்த 600 க்கு மேற்பட்ட அலுவலர்கள் கொண்ட ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் 388 நடமாடும் மருத்துவ குழுக்கள் ஊரகப் பகுதிகள் தோறும் சென்று மருத்துவ சிகிச்சைகளை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.