சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 7 நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரியல் எஸ்டேட் கன்சல்ட்டண்ட் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள தகவலின் படி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை தொகை இரண்டு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. அதிலும் மும்பையில் வீட்டு வாடகை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. அதன்படி மும்பையில் வொர்லி பகுதியில் சோசியல் வீடுகளுக்கான வாடகத்தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சத்திலிருந்து 18% உயர்ந்து ரூ.2.35 லட்சமாக அதிகரித்துள்ளது.
மும்பை மெட்ரோ பகுதியில் சொகுசு வீடுகளுக்கான வாடகை ரூ.2.7 லட்சத்திலிருந்து ரூ.3.1 லட்சமாக அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் சொகுசு வீடுகளுக்கான வாடகை ரூ.56,000 இருந்து 13% உயர்ந்து 63,000 ஆக அதிகரித்துள்ளது. அதனைப் போல கோட்டுபுரத்தில் சொகுசு வீடுகளுக்கான வாடகை ரூ.24,000 லிருந்து 14% உயர்ந்து 84,000 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பெங்களூருவில் ராஜாஜி நகரில் சொகுசு வீடுகளுக்கான வாடகை இரண்டு ஆண்டுகளில் 9% உயர்ந்துள்ளது. அதாவது ரூ.56,000 லிருந்து ரூ.65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஜே பி நகரில் வீட்டு வாடகை 13% உயர்ந்துள்ளது. மேலும் ஹைதராபாத்தில் ஜுபிலி பகுதியில் சொகுசு வீடுகளுக்கான வாடகை 13% உயர்ந்துள்ளது. அதனைப் போல ஹைட்டெக் சிட்டியில் வாடகை 11% உயர்ந்துள்ளது.