ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லக்கூடிய ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றுள்ளது. மீண்டும் ரயில் பிளாட்பார்ம் 4 லிருந்து புறப்பட்ட பொழுது கடைசி நேரத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார். படியில் ஏறியவுடன் அவர் பின்பக்கமாக சாய்ந்து விழுந்து ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் உள்ள இடைவெளியில் சிக்க இருந்தார். இந்த நிலையில் அதனை பார்த்து ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சதீஷ்குமார் அவரைக் காப்பாற்றி இழுத்து பிளாட்பாரத்தில் விட்டிருக்கின்றார்.
இந்த காட்சி ஆனது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் அந்த ரயில்வே காவலரை அங்கிருந்து பயணிகள் அனைவரும் பாராட்டியுள்ளனர். கடைசி நேரத்தில் வந்து ஓடும் ரயிலில் ஏன் ஏறுகின்றீர்கள் என அறிவுரை கூறி அமர வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது ரயில்வே பாதுகாப்பு படை காவலர் கடைசி நேரத்தில் மிக சாதுரியமாக செயல்பட்டு ரயில் சிக்க இருந்த பெண்ணை காப்பாற்றிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.