Categories
தேசிய செய்திகள்

தசரா பொதுக்கூட்டம்: எப்படியாவது நாங்கள் நடத்திருவோம்!…. உத்தவ் தாக்கரே அணியினர் தகவல்….!!!!

பால் தாக்கரே காலத்திலிருந்து வருடந்தோறும் மும்பை சிவாஜி பார்க் பூங்காவில் சிவசேனா கட்சி சார்பாக தசரா பொதுக்கூட்டம் நடந்தது. இப்போது சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக் கூட்டம் நடத்துவதில் 2 அணிக்கும் இடையில் போட்டி நிலவியது. 2 அணிகள் சார்பாகவும் அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அத்துடன் இருஅணியினரும் அந்த இடத்திற்கு மாற்றாக பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகத்திலும், எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்திலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் சென்ற வாரம் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியினர் பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகிடைத்தது. இதன் காரணமாக சிவாஜி பார்க்கில் தங்களுக்கு பொதுக் கூட்டம் நடத்த எளிதாக அனுமதி கிடைத்துவிடும் என சிவசேனா நம்பிக்கை தெரிவித்திருந்தது. எனினும் மாநகராட்சி இருஅணிகளுக்கும் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. சட்ட ஒழுங்கை காரணம்காட்டி அனுமதி வழங்க மும்பை மாநகராட்சியானது மறுத்துவிட்டது.

இச்சூழ்நிலையில் அடுத்த மாதம் 5ஆம் தேதியன்று சிவாஜிபார்க்கில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி உத்தவ்தாக்கரே தலைமையிலான அணியினர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரனை நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில  56 ஆண்டுகால பாரம்பரியத்தை விட்டுத்தர மாட்டோம் என கூறியுள்ள உத்தவ் தாக்கரே அணியினர், எப்படியும் கூட்டத்தை நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |