Categories
அரசியல்

நவராத்திரி பண்டிகையின் மந்திரங்கள்…. துர்கா தேவியின் 108 போற்றி மற்றும் காயத்ரி மந்திரம்…!!!!

இந்தியாவில் நவராத்திரி பண்டிகை வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களில் துர்க்கை, காளியம்மன், லட்சுமி தேவி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தெய்வங்களை காயத்ரி மந்திரத்தை கூறி வழிபடலாம். இதேபோன்று துர்கா தேவியை 108 போற்றிகள் சொல்லி வழிபடலாம்.

ராகுவிற்குரிய அதி தேவதை துர்கா. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் துர்கா தேவியின் 108 போற்றிகளை தினமும் கூறினால் சர்வ நலனும் உண்டாகும் என்று கூறுவார்கள். தற்போது தேவிகளை வழிபடக்கூடிய காயத்ரி மந்திரம் மற்றும் 108 போற்றி மந்திரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஸ்ரீ அன்னபூரணி மந்திரம் (அனைவருக்கும் என்றைக்கும் உணவு கிடைக்க)

*ஓம் பகவத்யை வித்மஹே
*மாகேச்வர்யை தீமஹி
*தந்நோ அன்னபூர்ணா பிரசோதயாத்

ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்

*ஓம் வாக்தேவியை வித்மஹே
*விரஞ்சி பத்ந்யை தீமஹி
*தந்நோ வாணி பிரசோதயாத்

ஸ்ரீ லட்சுமி காயத்ரி மந்திரம்

*ஓம் மகாலட்சுமியை வித்மஹே
*விஷ்ணு பந்த்யை தீமஹி
*தந்நோ லக்ஷ்மி பிரசோதயாத்

ஸ்ரீ காளி காயத்ரி மந்திரம்

*ஓம் காளிகாயை வித்மஹே
*சமசான வாசின்யை தீமஹி
*தந்நோ அகோர பிரசோதயாத்

ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்

*ஓம் காத்யாயனாய வித்மஹே
*கன்னி குமரீச தீமஹி
*தந்நோ துர்க்கி பிரசோதயாத்

துர்க்கை அம்மனின் 108 போற்றி ஓம்

*ஓ அகிலாண்ட நாயகி போற்றி

*ஓம் அஷ்டமி நாயகியே போற்றி

*ஓம் அபயம் தருபவளே போற்றி

*ஓம் அசுரரை வென்றவளே போற்றி

*ஓம் அன்பருக்கு எளியவளே போற்றி

*ஓம் அமரரைக் காப்பவளே போற்றி

*ஓ அறம் வளர்க்கும் தாயே போற்றி

*ஓம் அருள் நிறை அன்னையே போற்றி

*ஓம் அருளை பொழிபவளே போற்றி

*ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி

*ஓம் ஆலால சுந்தரியே போற்றி

*ஓம் ஆதியின் பாதியே போற்றி

*ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி

*ஓம் இணையில்லா நாயகியே போற்றி

*ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி

*ஓம் இடபத்தோன் துணையே போற்றி

*ஓம் ஈரமனத்தினாலே போற்றி

*ஓம் ஈடிணையற்றவளே போற்றி

*ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி

*ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி

*ஓம் உன் மத்தின் கரம் பிடித்தாய் போற்றி

*ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி

*ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

*ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி

*ஓம் எலுமிச்சை மாலை அணிபவளே போற்றி

*ஓம் ஏழுலகம் வென்றவளே போற்றி

*ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி

*ஓ ஐங்கரன் அன்னையே போற்றி

*ஓம் ஒளி மணி தீபத்தாயே போற்றி

*ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

*ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி

*ஓம் கவலையை தீர்ப்பவளே போற்றி

*ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி

*ஓம் காளியே நீலியே போற்றி

*ஓம் கபாலியை மணந்தவளே போற்றி

*ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி

*ஓம் கிரி ராஜன் மகளே போற்றி

*ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி

*ஓம் குமரனை பெற்றவளே போற்றி

*ஓம் குறுநகை கொண்டவளே போற்றி

*ஓம் குங்கும நாயகியே போற்றி

*ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி

*ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி

*ஓம் கோள்களை வென்றவளே போற்றி

*ஓம் சண்டிகேஸ்வரி தாயே போற்றி

*ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி

*ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி

*ஓம் சர்வ அலங்கார பிரியையே போற்றி

*ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி

*ஓம் சங்கரன் துணைவியே போற்றி

*ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி

*ஓம் சிவன் கரம் பிடித்தவளே போற்றி

*ஓம் சிங்காரவல்லியே போற்றி

*ஓம் சிம்ம வாகன நாயகியே போற்றி

*ஓம் சியாமள நிறத்தாலே போற்றி

*ஓம் சித்தி அளிப்பவளே போற்றி

*ஓம் செவ்வண்ண பிரியையே போற்றி

*ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி

*ஓம் ஜோதி சொருபமானவளே போற்றி

*ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி

*ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி

*ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி

*ஓம் தயாபரியே தாயே போற்றி

*ஓம் திருவெலாம் தருவாய் போற்றி

*ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

*ஓம் தீமையை அழிப்பாய் போற்றி

*ஓம் துஷ்ட நிக்ரகம் செய்பவளே போற்றி

*ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி

*ஓம் நன்மை அருள்பவளே போற்றி

*ஓம் நவசக்தி நாயகியே போற்றி

*ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி

*ஓம் நிமலையே விமலையே போற்றி

*ஓம் நிலாபிறை சூடியவளே போற்றி

*ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி

*ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி

*ஓம் பக்தருக்கு அருள்பவளே போற்றி

*ஓம் பரமானந்த பெருக்கே போற்றி

*ஓம் பைரவியே தாயே போற்றி

*ஓம் பயத்தை தாக்குபவளே போற்றி

*ஓம் பயங்கிரி சங்கரியே போற்றி

*ஓம் பார்வதி தேவியே போற்றி

*ஓம் புவனம் படைத்தவளே போற்றி

*ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி

*ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி

*ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி

*ஓ மங்கள நாயகியே போற்றி

*ஓம் மகேஸ்வரி தாயே போற்றி

*ஓம் மங்கையர்கரசியே போற்றி

*ஓம் மகமாயி தாயே போற்றி

*ஓம் மாதர் தலைவி போற்றி

*ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

*ஓம் மாணிக்க வல்லியே போற்றி

*ஓம் மாயோன் தங்கையே போற்றி

*ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி

*ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

*ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி

*ஓம் மூல பரம்பொருளே போற்றி

*ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி

*ஓம் யசோதை புத்ரியே போற்றி

*ஓம் யம பயம் போக்குபவளே போற்றி

*ஓம் ராகு கால துர்க்கையே போற்றி

*ஓம் ரௌத்திரம் கொண்டவளே போற்றி

*ஓம் வல்லமை மிக்கவளே போற்றி

*ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி

*ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி

*ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி

*ஓம் வைஷ்ணவி தாயே போற்றி

*ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

Categories

Tech |