தொலைத்தொடர்பு சேவைக்கு புதிய வரைவு மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நமது நாட்டின் மத்திய தொலைதொடர்பு துறை புதிய வரைவு மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நமது இந்திய நாட்டில் தொலை தொடர்புகளை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை மாற்ற நமது இந்திய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் 1885-ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டமும், 1933-ஆம் ஆண்டு வயர்லெஸ் தந்தி சட்டம் மற்றும் தந்தி கம்பி சட்டமும் கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்காக 1950-ஆம் ஆண்டு ஒரு புதிய மசோதா கொண்டுவரப்பட்டது. அதாவது புதிதாக கொண்டுவரப்பட்ட மசோதா முன்மொழியப்பட்ட மசோதா “இந்திய தொலைத்தொடர்பு மசோதா” என்று இந்த ஆண்டு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது நமது இந்திய நாட்டில் 118.92 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இதனால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சந்தையாக இந்தியா உள்ளது. இதில் மொபைல் போன் இணைப்புகள் 116.83 கோடி மற்றும் தரைவழி தொலைபேசி இணைப்புகள் 2.09 கோடி, நாட்டின் மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 90.23 சதவீதம் ஆகும். மேலும் இந்த ஆண்டு இந்திய தொலைதொடர்பு மசோதாவிற்கு வரைவைத் தயாரிக்கும் போது ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள தொடர்புடைய சட்டங்களும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் தரவு பாதுகாப்பு ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே புதிய வரைவு மசோதாவின் கீழ் ஓடிடி இயக்குனர்கள் ” தொலைத்தொடர்பு தேவைகளாக கருதப்படும். மேலும் ஒளிப்பதிவு சேவை , மின்னணு அஞ்சல் சேவை , குரல் சேவை , வீடியோ மற்றும் தரவு தொடர்பு சேவைகள், வீடியோ டெக்ஸ் சேவை , நிலையான மற்றும் மொபைல்கள் சேவை , இணையதளம் மற்றும் பிராட்பேண்ட் சேவை, விமானம் மற்றும் கடல் இணைப்பு, தனி நபர் தொடர்பு ஆகியவை இந்த புதிய வரைவு மசோதாவின் கீழ் தொலைத்தொடர்பு சேவைகளாக கருதப்படுகிறது. மேலும் இந்து மசோதா குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என கூறியுள்ளது.