நெடுங்குளம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பாக நெடுங்குளம் கிராமத்தில் இருக்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமை தாங்க வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க ஆசிரிய பயிற்றுநர் இசைக்கருவி வரவேற்றார்.
இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மாற்றுத்திறனாளி குழந்தைகள் 30 பேருக்கு உபகரணங்களை வழங்கினார். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கொடுக்கப்பட்ட உபகரணங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.