நான்கு மாத கைக் குழந்தையின் தாய் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்ட பங்களாபுதூர் சேர்ந்தவர் சம்பத் மஞ்சுளா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து நான்கு மாதக் கைக்குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தாய் வீட்டிற்கு சென்ற மஞ்சுளா நேற்று மதியம் வீட்டின் அருகில் இருந்த ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக மஞ்சுளா நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும் பங்களாபுதூர் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கி மஞ்சுளாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் மஞ்சுளாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆர்டிஓ விற்கு மாற்றப்பட்டுள்ளது. 4 மாத கைக் குழந்தையின் தாயான மஞ்சுளா நீரில் மூழ்கி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.