Categories
உலக செய்திகள்

போரில் உக்ரைன் கைகள் மேலோங்க வேண்டும்… அதுவரை ஓய மாட்டோம்… -பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸ், ரஷ்யாவை உக்ரைன் வெல்லும் வரை அந்நாட்டிற்கு உதவி செய்வோம் என்று கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் அதிகமான உயிர் பலிகள் ஏற்பட்டதோடு மக்கள் லட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறி இருக்கிறார்கள். இதில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பிரதமரான லிஸ் டிரஸ், ரஷ்ய நாட்டை இந்த போரில் வெல்லும் வரை உக்ரைன் நாட்டிற்கு தேவைப்படும் ராணுவ உதவிகளை தொடர்ந்து அளிப்போம் என்று உறுதி கூறியிருக்கிறார். உக்ரைன் படையினரின் கைகள் மேலோங்க வேண்டும். அதுவரை நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம் என்று ஐநா பொது சபை கூட்டத்தில் அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |