தமிழகத்தில் H1N1 இன்ஃபுளூயென்சா காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக இந்த காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், காய்ச்சல் சோதனையை அதிகரிக்க அடுத்த 15 நாட்களில் 6,000 சோதனைக்கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.