முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என சிம்பு கூறியதாக இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் முத்தக்காட்சி இடம் பெறுவது போல கௌதம் மேனன் அமைத்திருந்தாறாம். ஆனால் சிம்பு முத்தக்காட்சி வேண்டாம் என கூறிவிட்டாராம். இதன் பிறகு அந்த காட்சியை சீட் செய்து எடுத்தாராம் கௌதம் மேனன். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் கூறியுள்ளார் குறிப்பிடத்தக்கது.