ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு உள்ளிட்ட 58 சேவைகளை ஆன்லைன் மூலமாக பெரும் வசதியை மத்திய சாலை போக்குவரத்து துறை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக www.parivahan.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த வசதியை பெற முடியும். இதன் மூலமாக பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புகைப்படம் மாற்றம், சர்வதேச ஓட்டுனர் உரிமம் உட்பட 58 சேவைகளை ஆன்லைன் மூலமாக பெற முடியும். இந்த சேவைகளுக்கான கட்டடத்தையும் மக்கள் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.
ஆதார் எண் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி சேவைகளை ஆன்லைன் மூலமாக பெறலாம்.அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மட்டுமே இந்த சேவைகளை பெற முடியும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சேவை மூலமாக போக்குவரத்து அலுவலகத்திற்கு இனி மக்கள் நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.